இலங்கையில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்…நாயினால் எடுத்து வரப்பட்ட சிசுவின் தலை!

ஹொரண – பேருவ பகு­தியில் சிசு ஒன்றின் சடலம் நாய் ஒன்று எடுத்துவந்து போடப்பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக மீக­ஹ­தென்ன பொலிஸார் தெரி­வித்­தனர்.

பொலிஸ் அவ­சர பிரி­வுக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து அங்கு சென்று பொலிஸார் முன்­னெ­டுத்த சோதனை நட­வ­டிக்­கை­களின் போது சிசுவின் சட­லத்தின் பாகங்கள் இரு இடங்­களில் இருந்து மீட்­கப்­பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் சிசுவின் இடுப்­புக்குக் கீழ் பகுதி இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸார் கூருகின்றனர்.

நாய் ஒன்று, குறித்த சிசுவின் தலைப்­ப­கு­தியை கொண்டு வந்து வீடு ஒன்றின் அருகில் போட்­டி­ருந்­ததைக் கண்ட வீட்டின் உரி­மை­யாளர் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்ளார்.

இதனையடுத்து மீக­ஹ­தென்ன பொலிஸ் குழு­வினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களின் போது குறித்த சிசுவின் சட­லத்தின் மற்­றைய பாகம் பழைய மல­ச­ல­கூடம் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.

மேலும் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் பெண் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதுடன் மேல­திக விசா­ர­ணை­களையும் மீக­ஹ­தென்ன பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­றதாக தெரிவிக்கப்படுகின்றது.