ஆட்சியிலிருந்து விலகுமாறு அழுத்தம்! – தலைமைப் பொறுப்புக்கும் குறிவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டுமென கூட்டு எதிரணி அழுத்தம் கொடுத்து வருகின்றது.

கடந்த தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையை மக்கள் நீக்கியுள்ளனர் என்றும், அதன் பிரகாரம் ஆட்சியை கையளிக்க வேண்டுமெனவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் இணைந்த கூட்டரசாங்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் என பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலனறுவையிலேயே அவரால் பெரும்பான்மையை பெறமுடியவில்லையென தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.