பட்டாதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்மூலம் பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் மே மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பட்டதாரிகளை பொதுச் சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்வது அரசியல் ஊக்குவிப்பாக அமைவதால் அதனை இடைநிறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் வரையான காலப்பகுதிக்கு அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிலுநர் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த சுற்றறிக்கை வெளிவந்தது.