மைத்திரியின் 2ம் மனைவி ஜப்பானில்? புதுப் புரளி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்குமாறு பொலனறுவை மாவட்ட மக்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பேசினார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர், மைத்திரியின் மற்றுமொரு மனைவி இன்று ஜப்பானில் உள்ளார். அவருக்கு பல உள்ளன.

ஆட்சிக்காலத்தில் வங்கிக் கணக்கினை பலமடங்கு ஏற்றியுள்ளார். மைத்திரி பைத்தியக்காரன். ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தவன்.

மஹிந்த ராஜபக்சவின் சிறந்த விம்பத்தை சிதைத்தவன். இனியும் அரசியலுக்கு அனுமதிக்கக்கூடாது.

மைத்திரியை பொலனறுவை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்ற கடுந்தொனியில் முன்னாள் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.