குளிக்க வைத்த குழந்தையிடமிருந்து வெளியேறிய ஊசி… அலட்சியமாக இருந்த பெற்றோருக்கு கிடைத்த பேரதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தையின் இடுப்பிற்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட ஊசி இருந்தது பெற்றோருக்கும், மருத்துவர்களுக்கும் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுளளது.

இந்திய மாநிலமான தெலுங்கானாவில் வீபநகந்தலா மண்டல் கிராமத்தில் வசிப்பவர் அசோக் மற்றும் அன்னபூர்ணா தம்பதிகள். இவர்களுக்கு லோக்நாத்(3) என்ற மகன் இருந்துள்ளார்.

கடந்த வாரம் அன்னப்பூர்ணா மகனைக் குளிக்க வைக்கும் பொழுது கால் தசைப்பகுதியில் ஊசி ஒன்று வெளியேறியுள்ளது. இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெற்றோர் பின்பு சில நாட்களில் குழந்தை நடக்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளான்.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது குழந்தையின் இடுப்புக்கீழ் பகுதியில் மற்றும் சிறுநீரகங்களுக்கு அருகில் 11 ஊசிகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் ஒரு சில ஊசிகளை மட்டுமே எடுத்துள்ள மருத்துவர்களுக்கு மற்ற ஊசிகளை எடுப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளதாம்.

பின்பு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களது வீட்டு பக்கத்தில் வசித்து வரும் அலிவேலம்மா மற்றும் அஞ்சி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், குழந்தையை அடிக்கடி விளையாட அவர்களே அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.