பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் விடுவிப்பு!

யாழின் பிரபல பாடசாலை மாணவர்க61 பேர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு!

யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை மாணவர்கள் 61 பேர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு மாணவர்கள் பாடசாலை சீருடையில் , பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு வடி ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களின் கொண்டாட்டங்களால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் பாடசாலையை விட்டு சீருடையுடன் வெளியேறி வீதிகளில் இவ்வாறான கொண்டாடங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு

துடுப்பாட்டப்போட்டியை முன்னிட்டு யாழில் வீதியில் மகிழ்ச்சியை வெளிக்காட்டிய பிரபல பாடசாலை ஒன்றின் 61 மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்து விடுவிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.