இலங்கையில் இப்படியும் ஒரு பெண்!

போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளம்பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த நிலையில் , போதைப்பொருளுக்காக வைத்தியசாலையில் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

24 வயதான 3 பிள்ளைகளின் தாயாரே போதைப்பொருள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

சுமார் 10 நாட்களின் முன்பாக குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையான அவரால், போதைப்பொருள் இல்லாமல் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

அவரை பார்வையிட வந்த ஒருவர் அவருக்கு சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை இரகசியமாக வழங்கியதை அடுத்து , அவரை பார்வையிட வருபவர்கள் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

போதை இல்லாததால் அந்தப் பெண் வெறித்தனமாக நடக்க முற்பட்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் விடுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பெண்மணிக்குரிய சிகிச்சை வழங்கப்பட்டு, சாதாரண நிலையையடைந்த பின்னரே விடுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.