இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மருமகள் உணவு சமைத்து கொடுப்பதற்கு தாமதமானதால், மாமனார் மருமகளைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர், அவரது மருமகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொலிசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கொலை நடந்த தினத்தன்று, தனக்கு பசிப்பதாக மருமகளிடம் கூறியுள்ளார். இதற்கு உணவு தாயாரிப்பதற்காக மருமகளும் சமயலறைக்குள் சென்றுள்ளார். நேரம் அதிகம் ஆகியும் உணவு ரெடியாகவில்லை என்று வெறியான மாமனார், உணவு தயாரிப்பதற்கு இவ்வளவு நேரமா? எனக்கேட்டு மாமனார் மருமகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் மகன் கூறும் போது, வரதட்சணை தொடர்பாக தமது மனைவிக்கும் தமது தந்தைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகவும் தமது தந்தை அடிக்கடி கூறி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






