தென்னிலங்கை கடற்பரப்பில் சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 6000 மில்லியன் ரூபாவாகும். இந்தப் போதைப்பொருட்களுடன் 28 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகளும் அடங்குகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.






