கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை காலை முதல் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதனை வழங்கும் பகுதி நாளை காலை திறக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவே:ளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






