இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் சந்தேக நபர் சிக்கினர்! தாயாரின் சாமர்த்தியம்

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொடர்ச்சியாக இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளமை இன்றைய தினம் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை நகரப்பகுதியில் யுவதி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிக சம்பளத்திற்கு வெளியிடங்களில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றி கடத்த முற்பட்ட போது குறித்த யுவதியின் பெற்றோர் விழிப்படைந்த விழிப்படைந்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் லிந்துலை பொலிஸார் குறித்த சந்தேக நபரை யுவதியின் இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தொலைபேசியில் உரையாடும் போது இவரின் தாயார் அதுபோல் பதிலளித்து சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கு வரவழைத்து பின்னர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளமை தெரியவருகிறது.

தொடர்ந்து சந்தேகநபர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.