ஸ்ரீலங்காவில் இன்றையதினம் இழுத்து மூடப்படுகிறதா இலங்கை வங்கி?

80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில்பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும், எதிர்வரும் ஆறாம் திகதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை(06.03.2020) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வங்கிஊழியர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாளைய தினம் நாட்டிலுள்ள 637 கிளைகளைச் சேர்ந்த 10000 க்கு அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிகப்பெரும் அரச வங்கியின் இப்போராட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் காரணமாக வங்கியின் பெருமளவான வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படவுள்ளார்கள்.