அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே வீரசிங்கவை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கின்றது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை அவர் புறக்கணித்ததன் காரணமாகவே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கருதி இந்த பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.