வத்தளையில் பதற்றம்!

கொழும்பு புறநகரான வத்தளை – எலகந்த பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருவோரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த எலகந்த பிரதேசத்திலுள்ள மருத்துவமனையை அரசாங்கம் தயார் செய்தது.

இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவிற்கு எதிராகவே பிரதேச மக்கள் அங்கு தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.