1983ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “தமிழீழம் ஏன் அவசியம்?” என்னும் தலைப்பில் திமுக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உரையாற்றியிருந்தார்.
அவர் சுமார் 3 மணி நேரம் இது குறித்து உரையாற்றியிருந்தார். இந்த உரையை பிரசுரமாக அச்சிட்டு திமுக வினர் பின்னர் விநியோகித்து வந்தனர்.
நான் அறிந்தவரையில் ஈழத்து தலைவர்கள்கூட தமிழீழம் ஏன் அவசியம் என்று இத்தனை மணி நேரம் எங்குமே உரையாற்றியதில்லை.
கலைஞர் கருணாநிதியால் மதுரையில் நடத்தப்பட்ட தமிழீழ ஆதரவு (டெசோ) மாநாட்டிலும் பேராசிரியர் அன்பழகன் முக்கிய பங்கு ஆற்றினார்.
அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராகியதும் தமிழீழத்தை கைவிட்டது யாவரும் அறிந்ததே.
அவர் தமிழீழத்தை மட்டும் கைவிடவில்லை. கூடவே பேராசிரியர் அன்பழகன் தமிழீழம் ஏன் அவசியம் என்று பேசிய உரைப் பிரசுரத்தையும் கைவிட்டு விட்டார்.
பேராசிரியர் அன்பழகன் இறுதிவரை திமக கட்சிக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் விசுவாசமாக இருந்தார்.
ஆனால் தான்கூறிய தமிழீழத்திற்கு விசுவாசமாக இருக்கவில்லை. தன் தமிழ் இனத்திற்கும் விசுவாசமாக இருக்கவில்லை.
குறிப்பு – பேராசிரியர் அன்பழகனின் “தமிழீழம் ஏன் அவசியம்?” பிரசுரம் யாரிடமாவது இருந்தால் எனக்கு தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் வாலன் சந்திரன் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.