வடக்கில் கடந்த வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வாளர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தில் நவீன கருவிகளும் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த குழுவினருக்கு மேற்கத்தைய மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளில் இருந்து நிதியளிக்கப்படுவது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும், மலேசியாவிலும் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் இவர்களுக்கு நிதியுவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக படைதரப்பு தெரிவித்துள்ளது.






