தேர்தல் செலவு உள்பட அரச செலவுக்கான நிதி ஒதுக்கீட்டு ஜனாதிபதி ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்தலுக்கான செலவு உள்பட அரசின் செலவுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனுமதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இன்று 2020 மார்ச் 6ஆம் திகதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உள்பட அரசின் செலவுகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளித்து ஜனாதிபதி கோத்தாபபய ராஜபக்ச அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அமைச்சுகளுக்கு அரசால் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைகள் மற்றும் ஏனைய செலவுகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கு 5.5 பில்லியன் தொடக்கம் 7.5 பில்லியன் ரூபா வரை செலவாகலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.