இலங்கை உட்பட பெருமளவு நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது குவைத் எயார்லைன்ஸ்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் வியாபித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே குவைத் எயார் லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி இலங்கை, லெபனான், சிரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்த குவைத் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.






