மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுகட்சி பெண் வேட்பாளர் தெரிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுகட்சி இளைஞர்கள் தமிழரசுகட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துரைராசிங்கம், சுமந்திரன் போன்றவர்களின் கொடும்பாவி எரிக்கப்பட உள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
தகுதியான, ஆளுமையுள்ள சமூகத்தில் நன்மதிப்பு உள்ள வாக்கு வங்கி உள்ள பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைவிட கேவலம் இருக்க முடியுமா? சூடு சொரணையற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி அரசியல்வாதிகள், நாற்காலிகளுக்காக மட்டும் நாக்ககை தொங்கவிட்டபடி அலையும் ஜந்துக்கள்… நியமனத்தில் ஒருவர் முன்னாள் சிங்கள கட்சி வேட்பாளர், மற்றவர் மட்டக்களப்பு யாரென்றே அறியாத விடுதலைப் போரையே கொச்சைப்படுத்தும் ஜென்மம் என முகநுாலில் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மானமிகு மட்டக்களப்பு மக்களே இப்படிப்பட்ட நாசக்காரர்களை தேர்தலில் தோற்கடித்து அவர்களுக்கும் அவர்கள் போன்ற அடிவருடிகளுக்கும் தக்க படத்தை புகட்டுவீர்கள் என உறுதியாக நம்புகிறோம். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை எல்லாம் தெரிந்த வடக்கு – கிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயேன் தலைமறைவாம் என மட்டக்களப்பில் கூறுகிறார்கள்….






