தங்கமாக மாறிய இலங்கை பெண்ணின் உடல்!

தங்கத்தை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் சென்னை விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது உடலிற்கள் தங்கத்தை மறைத்து கொண்டு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கத்தின் பெறுமதி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெண் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை சோதனையிட்ட போது அவரது உடலில் தங்க கட்டிகள் மீட்கப்பட்டதாக சென்னை சுங்க பிரிவு அறிவித்துள்ளது.