இலங்கையிலிருந்து வந்த பெண் செய்த மோசமான செயல்!… பொலிசில் சிக்கியது எப்படி?

தமிழகத்தின் கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேரிடமிருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மூன்று பெண்கள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

திருச்சூரை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரது மனைவி இந்துமதி (27), இலங்கை கொழும்புவை சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி (36), லண்டனை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி(36) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்தியா முழுவதும் கோவில்களில் எங்கு திருவிழாா நடந்தாலும் இதுபோன்று செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், உறவினர் முறையில் நாங்கள் அனைவரும் அக்கா, தங்கைகள்.

இணையதளம் மூலம் கோவில் திருவிழா நடப்பதை தெரிந்து கொள்வோம், லண்டன், இலங்கையிலிருந்து வந்து அறை எடுத்து தங்கியிருந்து கோவிலுக்கு சென்று நோட்டமிடுவோம்.

பின்னர் விழா நடைபெறும் போது எங்கள் கைவரிசையை காட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களது பாஸ்போர்டை முடக்கிய பொலிசார், இந்துமதியின் கணவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பதி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் பொலிசிடம் சிக்கி வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.