கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பத்து நோயாளிகள் தற்போது வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு இலங்கையர்களும் மற்றுமொருவரும் தற்போது தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இரண்டு இலங்கையர்கள் குருநாகல போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரத்னபுரி மற்றும் பதுளை மருத்துவமனைகளில் தலா இரண்டு நோயாளிகள் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு நோயாளி கராபிட்டி போதனா மருத்துவமனையிலும், ஒருவர் நீர்கொழும்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகள் உட்பட பொது மக்கள் முகமூடி அணியலாமா என்று இதுவரை முடிவு செய்யவில்லை என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.