உலக சந்தையில் எட்டு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலையானது 1700 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2012ஆம் வருடத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இந்தளவு அதிகரித்துள்ளமை இதுவே முதன்முறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் எண்ணெய் சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்தியுள்ளதோடு, அதற்கு மாற்று நடவடிக்கையாக தங்க கொள்வனவிற்கு முதலீடு செய்ய தீர்மானித்துள்ளமையே தங்கத்தின் விலையுயர்வுக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சர்வதே ரீதியாக கொரோனா பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அண்மைக்காலமாக பங்குச் சந்தை பெருமளவில் சரிந்திருப்பதுடன், உலக வரலாற்றில் அமெரிக்காவின் பங்குச் சந்தையும் கடும் சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






