சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமையை நிலைநாட்டும் முகமாக கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் மோட்டார் சைக்கிளில் தனியே பயணத்தை ஆரம்பித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெண் விடுதலையையும் வலியுறுத்தியும் கொழும்பைச் சேர்ந்த பெண்மணி கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் இருந்து இலங்கையின் அனைத்து மாவட்டத்திற்கும் தனியாக தனது மோட்டார் வண்டியில் பயணம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார்.
அவர் இன்றைய தினம் தனது மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் நாவற்குழியில் யாழ்ப்பாணம் வரவேற்கும் வளைவில் யாழ்ப்பான சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பெண்மணியினை மாலை அணிவித்து வரவேற்று அவருக்கு உற்சாகம் அளித்தார்.






