நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் வருகையின் போதான நுழைவு விசைவை (Visa On Arrival) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் காணப்படும் கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றை இலங்கையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் சீனாவில் வேகமாகப் பரவிய போது அந்நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் வருகையின் போதனா நுழைவிசைவை வழங்குவதை இலங்கை அரசு இடைநிறுத்தியது.
இந்த நிலையில் அனைத்து வெளிநாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கும் வருகையின் போதான நுழைவு விசைவை (Visa On Arrival) வழங்கும் நடைமுறையை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.