கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணமாக இத்தாலி சுற்றுலாக்குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.






