பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா வெலிசறை பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அம்பாறையை சொந்த இடமாக கொண்ட குறித்த மாணவன் பதுளையில் உள்ள ஹிடகொடா என்ற இடத்தில் வீடொன்றில் தங்கி கல்வி கற்று வந்த நிலையில் இன்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸ் அதிகாரி வேதா தேசப்பிரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.