கொரோனா தொடர்பில் எழுந்துள்ள நாட்டு மக்களிடையே அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை 13ஆம் முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , பரவி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், பாடசாலை மாணவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.