மட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை! வெளியானது அதிர்ச்சியூட்டும் காணொளி

மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அப்பிரதேச மக்கள் உட்பட பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கபட்டிருந்தது.

ஆனால், அதிகாரிகள் தெரிவித்திருந்தமைக்கு மாறாக குறித்த பல்கலைகழகத்தில் சத்திர சிகிற்சைகூடங்கள் அமைக்கப்பட்டு நோயாளர்கள் அனுமத்திக்கப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

அதோடு அது தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.