நாட்டிலுள்ள சினிமா திரையரங்குகள் அனைத்தும் இன்று முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படுவதாக கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் மக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.






