இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கந்தகாடு முகாமிலும் மற்றைய நபர் நாத்தாண்டிய முகாமிலும் சோதனையிடப்பட்ட போது, கொரோனா தொற்று ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை எட்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.