எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வைரஸ் பரவுவதைக் குறைக்க அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மக்கள் தங்கள் வீடுகளில் தங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பயணங்கள் அல்லது பிற உல்லாசப் பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.