கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் தீபா பரிதாப மரணம்

Scarboroughவில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான தீபா சீவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் குறிப்பிட்ட பெண்ணின் தாயார் என குடும்பத்தினர் மூலம் தெரியவருகின்றது. படுகாயமடைந்த நிலையில் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.