இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வைத்தியசாலைகளின் விபரங்களை இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உலகளாவிய ரீதியில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல் ஆயிரக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் மேலும் 160 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையர்கள் எவெரேனும் தமக்கு கொரோனா தொற்றிற்குரிய அறிகுறிகள் இருக்ககூடுமென சந்தேகம் கொண்டால் இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் அதற்குரிய சோதனைகளை மேற்கொள்ள முடியுமென அறிவுறுத்தியுள்ளது.






