கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (மார்ச் 15) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஒருவரே கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது கொழும்பு தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் 133 கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 17 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படிகின்றனர். அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 10 தடுப்பு நிலையங்களில் ஆயிரத்து 500 பேர் தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.






