இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகை தந்த நிலையில் கந்தகாடு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களே வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.