கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் கொழும்பு நகரம் முழுமையாக மூடப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் (ஸ்ரீகொத்த) இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்தார்.
அத்துடன் , சுகாதாரத் துறையினர் கொழும்பு நகரை வரும் தினங்களில் மூடலாம் என்கிற தகவலை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வரும் இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றங்களை மூடும்படி இலங்கை சட்டத்தரணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை நாடு முழுவதிலும் இன்று திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மிகவும் பரபரப்பு மற்றும் சனநெரிசலாக காட்சியளிக்கும் கொழும்பு நகரம் இன்று வெறிச்சோடிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







