வெளிநாடுகளில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் கற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இன்று அதிகாலை முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் பலர் பதுளை, தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






