நாளை மார்ச் 17ஆம் திகதி வேலை நாளாகும் என்று பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மார்ச் 16ஆம் திகதி அரச, வங்கி, வர்த்தக விடுமுறை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் பொது விடுமுறையை நீடிக்கப்போவதில்லை என்று பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு கால பணிகள் மற்றும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு கோரோனா வைரஸ் பொது விடுமுறையை நீடிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






