கொரோனா அச்சம்! இலங்கை முழுமையாக முடக்கப்பட உள்ளதாக தகவல்

இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களது முகநூலிலும் பகிரங்கமாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பில் இன்று விஷேட சந்திப்பு ஒன்றை நடத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு ஒன்றை எடுப்பார் என அரச மட்ட தகவல் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் 28 பேருக்கு பீடித்திருபத்து உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மேற்படி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஏப்ரலில் நடத்த தீர்மானிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.