கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 3 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
இன்று மார்ச் 17 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
கோரோனா வைரஸ் (COVID-19) தொற்று பரம்பலை நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரி சபை ஜனாதிபதிக்கு பரிந்துரைந்திருந்தது. அத்துடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதைத் தடுக்கும் வகையில் விமான நிலையங்களை மூடுவதற்கு கோரியிருந்தது.
இந்த நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.






