நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய! நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ ரூ.65, மீன் ரின் ரூ.100

நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அத்துடன் மீன் டின் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பல நிவாரணங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாரிய சுமையாக உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன் அறவிடும் நடவடிக்கைகளை 6 மாதங்களுக்கு நிறுத்துவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமை போன்றே செயற்படும். வங்கி, பொதுப் போக்குவரத்து சேவைகளில் எந்த சிக்கல்களும் இருக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.