கொரோனா தொற்றுடன் இருக்கும் நபர்? இவரை கண்டால் உடன் அறிவியுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றைக் கொண்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.

உதவி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இன்று குறித்த வெளிநாட்டவருடைய புகைப்படத்தை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த வெளிநாட்டவர் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக நம்பப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.