மைத்திரி – ரணிலை இறுகப் பிணைக்குமா?

உள்ளராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கட்சிகள் பிளவடைந்து தேர்தலில் போட்டியிட்டமையே தோல்விக்கான பிரதான காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கனிசமானளவு வெற்றியை நோக்கி நகர்கின்றது என்பதனை மறுப்பதிற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பல வட்டாரங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக் கூடுதல் வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் நல்லாட்சி அரசாங்கத்தை ஒரு வழியில் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆணையில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாமே எமக்குள் மோதிக் கொள்வதனால் இவ்வாறு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியானது மீள ஒருங்கிணைவதற்கான ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.