ஒருவருக்கு கொரோனா நோய் வந்து இறந்ததன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள்?” என்று ஒருவர் கேட்டார். உண்மையில் கொடுமையிலும் கொடுமையான இறுதிக் கணம் அது.
இதன் படிமுறை பின்வருமாறு அமையும்.
- கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்டவரது உடலம் உடனடியாக வைத்தியசாலையின் பிரத்தியேக பிணவறைக்கு மாற்றப்படும்.
- உடலத்தை மிகமிக குறைந்தபட்ச கையாளுகை (அருகில் செல்வதை முடிந்தவரை தவிர்த்தல்)
- உடலத்தின் வெளிப்புற பரிசோதனை எதற்குமே இடமளிக்கப்படாது.
- மிக மிக நெருங்கிய உறவினர்கள் (பெற்றோர், சகோதரர்) மட்டுமே பாதுகாப்பான பார்வைக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கென வைத்தியசாலையில் முற்கூட்டியே பாதுகாப்புமிக்க இடம் தயார்ப்படுத்தப்படும்.
- பிரேத பரிசோதனை (Autopsy), உள்ளுறுப்பகற்றல் (Embalming) எதுவுமே இல்லை.
- உடலம் பிணப்பையில் (Body Bag) வைத்து சீல் வைக்கப்படும்
- சீல்வைக்கப்பட்டபின் உடலம் எக்காரணம்கொண்டும் பார்வைக்கு வைக்கப்படாது.
- பிணப்பையில் வைத்து சீல்வைக்கப்பட்ட உடலம் இதற்கென்றே தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து இறுதி மரியாதைக்காக சீல்வைக்கப்படும்.
- இறுதிக் கிரியைகளுக்காக உடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்படாது. வீட்டிற்கு கொண்டுசெல்லவும் முடியாது.
- இறந்து 24மணித்தியாலத்துள் உடலம் மின்சாரத் தகனம் செய்யப்படும்.
எவ்வளவு கொடுமையான ஒரு இறுதி முடிவு. கொரோனா வந்து இறப்பவர் எண்ணிக்கை குறைவுதான். இறந்தபின் நடக்கும் அந்த கணங்கள்…? முடிந்தவரை இந்த கொடூர நோயிலிருந்து தப்பிவாழ்வோம் உறவுகளே.






