கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பெண் மருத்துவர் செய்த செயல்!பலரும் விசனம்

நாடு முழுதும் கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது செயற்பாடு குறித்து பல விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இதன்போது கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தனது கூட்டத்திற்கு வந்த மக்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா வரஸ் பரவிவரும் நிலையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.