படு தீவிரமாக தாக்கிய கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது மூதாட்டி! சீனாவில் நடந்த அதிசயம்

சீனாவில் 103 வயது பாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

103 வயது மூதாட்டியான ஜாங் குவாங்பெனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் பாட்டி நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 1ம் திகதி உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஜாங் குவாங்பென், மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருந்தார்.

அவர் தனக்கு என்ன ஏற்பட்டது என்பதை மருத்துவர்களிடம் வாய்திறந்து சொல்லக்கூடிய முடியாத நிலையில் இருந்துள்ளார்.

அப்படிப்பட்ட வயது முதிர்ந்த பெண் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது சீன மருத்துவர்களிடையே விவாதத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இத்தனைக்கும் மூதாட்டிககு உயர் ரத்த அழுத்தம் , இதய செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சகைள் இருந்திருக்கிறது. அத்துடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும்அவர் முழுமையாக குணமானது ஆச்சர்த்தை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், சீனா மருத்துவர்களின் முயற்சியும், அதிநவீன மருத்துவ முறைகளையும் பயன்படுத்தி 103 வயது பாட்டியை காப்பாற்றியுள்ளனர்.

இப்போது கெரோனா பிடியில் இருந்து 103 வயது மூதாட்டி ஜாங் குவாங்பென் தப்பியது மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு உலகம் முழுவதில் இருந்தும் பலரும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.