புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊடரங்கு நிலை இன்று வியாழக்கிழமை 8 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்படுகிறது.
இந்த தகவலை பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை அறிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிக்குத் தளர்த்தப்படும் பொலிஸ் ஊடரங்கு பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கீழ் இந்த ஊடரங்கு புத்தளம், சிலாபம் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) பொலிஸ் பிரிவிலும் நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வருகை தந்தோரில் பெரும்பாலனோர் புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருப்பதாக்க் குறிப்பிட்டு அவர்களால் கோரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த ஊடரங்கு நடைமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.






