கனடாவில் தமிழர் உட்பட மூவர் திடீர் கைது

கனடாவின் டொரன்டோ (Toronto) காவல்துறையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட மூன்று கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Scarboroughவில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழர் 34 வயதான கஜந்தன் கனகராஜா எனத் தெரியவருகின்றது.

இவர் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மே மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் எதிர் கொள்கின்றார்.