உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், இத்தாலியில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மருத்துவ ஊழியர்கள் இந்த பேரழிவுக் காலத்தில் பணிபுரியும்போது பல கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் மனதளவில் வலிமையை இழந்து அழுது விடுகின்றனர் என்று டாக்டர் சளரொளி கூறுகிறார்.
தலைமை பொறுப்பில் உள்ள மருத்துவரில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு மருத்துவராக பொறுப்பேற்றவர் வரை அனைவருக்குமே ஒரே விதமான மன அழுத்தம்தான். 30 வருடம் செவிலியராகப் பணியாற்றிய ஒருவர் கூட கதறி அழுததை பார்த்ததாக மருத்துவர் சளரொளி கூறுகிறார்.
இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க அல்லது, தனிமைப்படுத்த இரண்டில் ஒன்று செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இத்தாலி தள்ளப்பட்டுள்ளது.